மதுரையில் பரபரப்பு – திமுக பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் .!

மதுரையில் பரபரப்பு – திமுக பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் .! மதுரை மாநாகராட்சியின் 54-வது வார்டு கவுன்சிலராகவும், மாநகராட்சி கணக்குக்குழு தலைவராகவும் உள்ளவர் நூர்ஜஹான். இந்த நிலையில், நேற்று முன் தினம் மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் மண்டல தலைவர் பாண்டிச்செல்வி தலைமையில் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்திற்கு வந்த அவரது கணவர் மிசா பாண்டியன், கவுன்சிலர் நூர்ஜஹானை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து நூர்ஜஹான் போலீசில் புகார் அளித்துள்ளார்.  … Read more

தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு..!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.44,960-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,620-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 … Read more

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கனிமொழி குற்றச்சாட்டும், அண்ணாமலை விளக்கமும்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த ஆட்சியில் எப்படியும் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க தீவிர முனைப்பில் செயல்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க தேர்தல் இணை பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில், பெங்களூர் புறநகர், மைசூர், சாம்ராஜ் நகர், சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். கர்நாடக தேர்தல் பிரசார மேடையில் அண்ணாமலை இந்த நிலையில், நேற்று சிவமொக்கா என்.இ.எஸ் பகுதியில் தேர்தல் பிரசாரமாகத், தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைவு … Read more

ஊராட்சி மன்றத் தலைவரை சுத்துபோட்டு வெடிகுண்டு வீசி.. வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான, பாஜக மாநில நிர்வாகி மர்மநபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், தமிழக பா.ஜ.க பட்டியலின அணி பொருளாளராக பதவி வகித்து வந்தார். நேற்று காலை சென்னை சென்று விட்டு, இரவு வீட்டிற்கு தனது காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். பெங்களூரு நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் … Read more

கள்ளழகரை வரவேற்க தயாராகும் மண்டகப்படிகள்: மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்க அழகர்கோவிலில் இருந்து வருகை தரவுள்ள கள்ளழகரை வரவேற்க மண்டகப்படிகள் தயாராகி வருகின்றன. சித்திரைத் திருவிழாவானது, மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி, முன்பு ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களும் சேர்ந்து கொண்டாடும் விழாவாகும். இந்த மாவட்டத்து மக்கள், இந்த திருவிழாவில் மீனாட்சியம்மன் கோயில் தேர்த் திருவிழா, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தினமும் நடைபெறும் சுவாமி உற்சவத்தை காணவும், வைகை … Read more

இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் – ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி தற்பேது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,852 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 7,533 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 53,852 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 44 பேர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் … Read more

எளிய தொழில்நுட்பம் மூலம் தட்பவெப்ப நிலை, வானிலை சாதனம்: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருபவர் பரத்குமார். இவர் அறிவியல் ஆசிரியை அனிதா வழிகாட்டுதலோடு எளிய தொழில் நுட்பத்தில் வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், மழை முன் அறிவிப்பு, காற்றழுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்கும் வானிலை சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த சாதனத்தை பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர் பரத்குமார் காட்சிக் குவைத்தார். அது சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மண்டல அறிவியல் … Read more

ஓபிஎஸ்ஸுக்கு அடி மேல் அடி: புதிதாய் சேர்ந்த இன்னொரு வழக்கு!

அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர் செல்வம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. லாரி சென்றதில் இடிந்து விழுந்த பாலம் குறித்து பேசுவதற்கு அ.தி‌.மு.க- பா.ஜ.க போராட்டம்! இதில் அனைத்திலும் முன்னெடுத்தவை அவருக்கு எதிராகவே முடிந்தன. கர்நாடக … Read more

Ponniyin Selvan 2: பாகுபலி 2 படத்தை விட பொன்னியின் செல்வன் 2 சிறப்பு: ரசிகர்கள்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Ponniyin Selvan 2 vs Baahubali 2: பாகுபலி 2 படத்தை விட பொன்னியின் செல்வன் 2 படம் தான் அருமை என சமூகவலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். ​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே … Read more

யாழிற்கு விரைந்துள்ள முக்கிய குழு! வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் (Photos)

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் அடங்கிய குழு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளது.  2022/2023ஆம் ஆண்டின் காலபோக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் இருப்பினை விநியோகித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசி பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பணிக்குழாம் … Read more