மண்ணெண்ணெய் தட்டுபாட்டுக்கு மத்திய அரசே காரணம் – தமிழக அரசு குற்றச்சாட்டு

ரேஷன் கடைகளுக்கு தேவையான உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.   

'நான் செத்துவிடுவேன்…' நெறியாளர் கேள்விக்கு டக்குனு சொல்லிய விராட் கோலி – எதற்கு தெரியுமா?

Virat Kohli: விராட் கோலியின் ஆக்ரோஷமான நடத்தை அவரது போட்டியாளர்களை மிகவும் அச்சுறுத்தக் கூடிய ஒன்றாகும். களத்தில் இருக்கும் போது, கோலியின் போட்டி மீதான தீவிரம் அடிக்கடி அவர் ஈடுபடும் உற்சாகமான கொண்டாட்டங்களில் வெளிப்படும். உண்மையில், அவர் இந்திய கிரிக்கெட் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தும் போது, அவர் களத்தில் அதிக ஆக்ரோஷமானவராக இருப்பதை பலமுறை நாம் பார்த்திருப்போம். அப்போது, விராட் கோலி எப்போதுமே இப்படித்தான் இருப்பாரா என்ற கேள்வியும் நம்மிடம் எழுந்திருக்கும்.  இதே … Read more

இந்தியாவில் யானைகளின் வாழிடம் 86 விழுக்காடு அழிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்

ஆசியா முழுவதும் யானைகளின் வாழ்விடங்களில் 3ல் 2 பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சான்டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காடழிப்பு, விவசாயம், மரம் வெட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற காரணங்களால் யானைகள் தங்கள் வாழிடங்களை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போது 13 நாடுகளில் வசித்து வரும் ஆசிய யானைகளின் காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகளில் 64 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யானை, மனித மோதல்கள் அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் 94 விழுக்காடு நிலத்தையும், … Read more

மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படும் ரிஷி சுனக்கின் மனைவி: பிரித்தானிய ஊடகங்களின் கண்ணில் சிக்கிய காட்சி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்ன செய்தாலும், கண்கொத்திப்பாம்பாய் அவரை கவனித்துக்கொண்டே இருக்கின்றன பிரித்தானிய ஊடகங்கள். பிரித்தானிய ஊடகங்களின் கண்ணில் சிக்கிய காட்சி சமீபத்தில், உள்ளாட்சித் தேர்தல்களில் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு வாக்களிக்கக் கோரும் போஸ்டர் ஒன்றுடன் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்திருந்தார் பிரதமர் ரிஷியின் மனைவியான அக்‌ஷதா மூர்த்தி. ஆனால், கமெராக்களின் கண்களோ, அவரது கால்களைக் கவனித்துள்ளன. அக்‌ஷதா, 645 பவுண்டுகள் மதிப்புடைய டிசைனர் செருப்புகளை அணிந்திருந்தார். ஆக, நாட்டு மக்கள் விலைவாசி உயர்வாலும், மின்கட்டண … Read more

கார் வாங்கப்போறீங்களா? இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பான கார்கள் இவைதான்

இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: கார் வாங்கும் கனவு அனைவருக்கும் உள்ள ஒரு கனவாகும். தினமும் அலுவலகம் செல்ல, குடும்பம், உறவினர்களுடன் வெளியே செல்ல என நாம் பயன்படுத்தும் கார் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கார் வாங்கும்போது விலைக்கு ஈடாக பாதுகாப்பு அம்சத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். கார்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், மக்கள் கார்களின் பாதுகாப்பு மதிப்பீட்டையும் சரிபார்க்கிறார்கள்.  இந்த காலத்தில், … Read more

ஏப்ரல் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 342-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 342-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த பார்முலாவே காலி.. ஒரே கல்லில்.. சசி +டிடிவி +ஓபிஎஸ்ஸை ஒன்றாக வீழ்த்திய எடப்பாடி! முடிஞ்சிடுச்சே

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: அமித் ஷா – எடப்பாடி – அண்ணாமலை மீட்டிங் காரணமாக, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்து உள்ளது. நேற்று முதல் நாள் டெல்லியில் அண்ணாமலை – அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை … Read more

மாதவன் – நயன்தாரா நடிக்கும் தி டெஸ்ட் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு

மாதவனும், நயன்தாராவும் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போகும் படம் தி டெஸ்ட். இந்த படத்தில் சித்தார்த் – ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது. தற்போது தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த இன்னொரு அறிவிப்பை அப்படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த படத்தின் ஸ்போர்ட்ஸ் இயக்குனராக துருவ் பஞ்சுவாணி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஎப்எக்ஸ் விஜய்யும், குணால் ராஜன், … Read more