டோக்கியோ: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த ஜாக் பாவுக்கும் சீன அரசுக்கும் இடையேயான மோதல் இருந்தது அனைவருக்கும் தெரியும்.. இதனிடையே இப்போது அவர் ஜப்பானில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது அண்டை நாடான சீனாவில் மக்களாட்சி எதுவும் இல்லாமல் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. அதாவது அங்கே அதிபரைத் தேர்வு செய்யத் தேர்தல் எல்லாம் இல்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு மூலமே அதிபர் தேர்வாவார்கள்.
இப்போது அங்கே அதிபராக ஜி ஜின்பிங் உள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த ஜின்பிங் அதன் பின்னர் வலிமையான தலைவராக உருவெடுத்தார். எதிர்ப்பாளர்களை ஒழித்துக் கட்டினார்.
ஜப்பான்: அங்கே எந்தவொரு தலைவரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தது இல்லை என்ற நிலையில், அதை மாற்றி எப்போதும் அதிபர் பதவியில் வகையிலான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். இது மட்டுமின்றி கட்சிக்குள் அல்லது நாட்டில் எங்காவது எதிர்ப்பு கிளம்பினால், அதை உடனடியாக நசுக்குவதையும் ஜி ஜின்பிங் வாடிக்கையான ஒன்றாகவே வைத்துள்ளார். தனது அரசுக்கு எதிராகப் பேசினால்.. அது யாராக இருந்தாலும் தயவு தாட்சணியம் பார்க்காமல் ஒழித்தார்.
அப்படிச் சிக்கியவர்களில் ஒருவர் தான் ஜாக் மா.. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன பெரும் பணக்காரர்களின் முகமாகவும் அந்நாட்டின் தொழிற்துறையின் முக்கிய நபராகவும் இருந்தவர் ஜாக் மா. அவர் அங்கே தொடங்கிய அலிபாபா நிறுவனம் மெகா ஹிட் அடித்தது. இதனால் தான் அவர் சீனாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்தார். இதற்கு அங்குள்ள ஜின்பிங் அரசு கொடுத்த ஆதரவும் முக்கிய காரணம்.
ஜி ஜின்பிங்: இந்தச் சூழலில் தான் கடந்த 2020இல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி ஜின்பிங் சில பரபர கருத்துகளைக் கூறினார். அதாவது வேகமாக வளர பல சீர்திருத்தங்கள் தேவை என்று குறிப்பிட்ட அவர், சீன வங்கிகள் அடகுக்கடை மனநிலையுடன் செயல்படுவதாகவும் சீன ஒழுங்குமுறை அமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். அவ்வளவு தான் இங்கே ஆரம்பித்த சீன அரசின் நடவடிக்கை ஜாக் மாவை காலி செய்துவிட்டது.
அவரது டெக் நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜாக் மா தனது Ant நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட இருந்த நிலையில், அதுவும் கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஒதுங்கி சில காலம் இருந்த ஜாக் மா எங்குச் சென்றார் என்றே தெரியாத நிலையே சில காலம் இருந்தது. அதன் பின்னரே ஜப்பான் நாட்டிற்கு அவர் தனது குடும்பத்துடன் வந்துவிட்டது தெரியவந்தது.
ஜாக் மா: இதனிடையே உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த ஜாக் மா இப்போது ஜப்பானில் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார். டோக்கியோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் புதிய அமைப்பான டோக்கியோ கல்லூரியில் விசிட்டிங் பேராசிரியராக அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் டாப் பிஸ்னஸ்மேன்களில் ஒருவராக இருந்த ஜாக் மா உடனான பல்கலைகழக ஒப்பந்தம் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறதாம். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்லூரியில், ஜாக் மா முக்கிய ஆய்வுகளுக்கு ஆலோசனை வழங்குவார்.. மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அவர் லட்சர்களையும் வழங்க உள்ளார்.
டோக்கியோ கல்லூரி: கடந்த மார்ச் மாதம் ஜாக் மா சீனாவுக்குத் திரும்பியிருந்தார். சீன அரசு உடனான மோதல் காரணமாக சுமார் ஒரு ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் தங்கியிருந்த நிலையில், மார்ச் மாதம் தான் சீனா திரும்பினார். இந்தச் சூழலில் தான் மீண்டும் டோக்கியோ கல்லூரியில் அவர் விசிட்டிங் பேராசிரியராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டோக்கியோ பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு புள்ளியாக இருக்கும் டோக்கியோ கல்லூரி கடந்த 2019இல் நிறுவப்பட்டதாகும்.