அமெரிக்காவில் முன்னாள் பிணவறை ஊழியர் ஒருவர் பேஸ்புக்கில் ஒருவருக்கு 20 பெட்டிகளில் உடல் உறுப்புகளை விற்ற விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
சடலங்களில் இருந்து உறுப்புகள் திருட்டு
ஆர்கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த Candace Chapman Scott என்பவரே மருத்துவ கல்லூரி ஒன்றில் பாதுகாக்கப்பட்டிருந்த சடலங்களில் இருந்து உறுப்புகளை திருடியவர்.
மட்டுமின்றி, அந்த உறுப்புகளை கிட்டத்தட்ட 9,000 பவுண்டுகளுக்கு பென்சில்வேனியா நபர் ஒருவருக்கு விற்றுள்ளார்.
36 வயதான அந்த பெண்மணி தகனம் செய்வது, உடல்களை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும் எஞ்சிய உறுப்புகளை பதப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார்.
2021 அக்டோபர் மாதம் பேஸ்புக் பக்கத்தில் ஒருவரை தொடர்புகொண்ட குறித்த பெண்மணி, அவருக்கு பதப்படுத்தப்பட்ட மூளை ஒன்றை விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளார்.
பதப்படுத்தப்பட்ட மூளை விற்பனை
மட்டுமின்றி, பேஸ்புக்கில் அவருடன் உரையாடுகையில், மிக சாதாரணமாக பதப்படுத்தப்பட்ட மூளையை விற்பனை செய்வது தொடர்பில் விசாரித்துள்ளார்.
இதனையடுத்து, தொடர்ந்து 9 மாதங்களாக தொடர்புடைய பெண்மணி இருதயம், பிறப்புறுப்பு, நுரையீரல், தோல், மூளை என விற்பனை செய்துள்ளார்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு பிணை வழங்கலாமா என்பதை, நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்ய இருக்கிறது.