
இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன்-2
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்-2. கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியானது.
இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், புத்தகம் படித்தவர்களுக்கு ஒரு சில காட்சிகள் மாற்றியமைத்ததால் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது.