கீவ்,
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சண்டை தொடங்கியது. ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும் இந்த சண்டை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கிழக்கு நகரான பவ்லோஹார்ட் நகரத்தில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 34 பேர் காயம் அடைந்தனர். மேலும் பல வீடுகளும் சேதம் அடைந்தன.
Related Tags :