இதுவரை இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 45 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட மொத்த கணக்குகளில், 16 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள் விதிகளை மீறி செயல்பட்டதற்காக தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எஞ்சிய 28 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள் மீது சக பயனர்களிடமிருந்து மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.