கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023: தேர்தல் அறிக்கை.. காங்கிரஸிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்.?

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் சொதப்பல்

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற இருக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெல்லும் கட்சியை மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும். இந்த சூழலில் தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் கட்சியே மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என உறுதியாக கூறியுள்ளன.

அதேபோல் பாஜகவின் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததும், பாஜகவின் பிரச்சார வாகனத்தை அடித்து நொறுக்கியதில் இருந்து தெரியவருகிறது. அதேபோல் சமயல் எரிவாயு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், வேலை இல்லாத் திண்டாட்டம், 40% கமிஷன், ஹிஜாப் விவகாரம், சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு, இடஒதுக்கீடு பிரச்சனை, அமுல் VS நந்தினி பால் நிறுவன விவகாரம் உள்ளிட்டவைகளும் பாஜகவிற்கு பெருத்த அடியை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இலவச கல்ச்சர்

இந்தநிலையில், தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. வருமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு இலவசம், தினமும் அரை லிட்டர் பால் இலவசம், மாதந்தோறும் 5 கிலோ பருப்பு இலவசம், முதியோருக்கு வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை, பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட வாக்குறுதிகள் பாஜகவால் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கர்நாடகாவில் பேசிய பிரதமர் மோடி, இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவை என்று கூறினார். இந்த நிலையில் தான் சிலிண்டர், பால், பருப்பு வகைகள் இலவசம் என பாஜக அறிவித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. அதேபோல் சிலிண்டரின் விலையை மும்மடங்கு ஏற்றி விட்டு, தற்போது ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம் என கூறுவதும் பேசு பொருளாகியுள்ளது. இலவச சிலிண்டர் எல்லாம் வேண்டாம், விலையை குறைத்தால் மட்டும் போதும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாளை சம்பவம்

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா இன்று தெரிவித்துள்ளார். நாளை வெளியிடப்பட உள்ள தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்துள்ள வாக்குறுதிகள் கர்நாடகா மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளன. ஏழைகளுக்கு 200 யுனிட் வரை இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம், டிப்ளோமா படித்தவர்களுக்கு மாதம் ரூ.1500, இல்லதரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.