குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் 63-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் இரு மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிறுவன நாளை முன்னிட்டு மாநில மக்களுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையின் கீழ் மாநிலம் வளர்ச்சியை நோக்கி முன்னேறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் 63-வது நிறுவன தினத்தையொட்டி மும்பையில் உள்ள ஹுதாத்மா சவுக்கில் சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அஞ்சலி செலுத்தினார்.
நாக்பூரில் உள்ள கஸ்தூரி சந்த் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.