மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், நேற்று முன்தினம் நயாரிட்டில் உள்ள கடற்கரை பகுதிக்கு சுற்றுலா செல்ல 50க்கும் மேற்பட்டோர் பஸ்சில் கிளம்பினர்.
நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 11 பெண்கள் உட்பட 18 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 குழந்தைகள் உட்பட 33 பேரை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement