சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது..? – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு…!

சென்னை,

16வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இது வரை 42 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் குஜராத் அணி முதல் இடத்திலும், லக்னோ, ராஜஸ்தான், சென்னை அணிகள் 2 முதல் 4 இடங்களில் உள்ளன.

தோனி தலைமையிலான சென்னை அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து சென்னை அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் லக்னோவை வெளியூர் அடிப்படையிலும், மும்பை அணியை சென்னையிலும் எதிர் கொள்ள உள்ளது.

இந்நிலையில் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான மே 6 அன்று சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனைக்கான தேதியை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு துவங்கும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் மற்றும் கவுண்ட்டர் டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு துவங்கும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.