உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின் போது தஞ்சை மாநகராட்சி மேயரும் மாநகராட்சியின் ஆணையரும் கோலாட்டம் ஆடினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் இருக்கும் பழமையான கோவில்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் இந்தியா மட்டுமல்லாது உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு தேரோட்டம் நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தபடி செல்ல நாதஸ்வரம் மற்றும் மேளதாளம் முழங்க கலைஞர்கள் ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் ஆடி வந்தனர்.
அவர்களுடன் தஞ்சை மாநகர மேயர் சண்முகநாதன் மற்றும் ஆணையர் சரவணகுமார் ஆகியோர் அவர்களுடன் கோலாட்டம் ஆடினார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.