வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு-”இலங்கையில், நீண்ட காலமாக உள்ள தமிழ் இன பிரச்னைக்கு, இந்தாண்டு இறுதிக்குள் சுமுக தீர்வு எட்டப்படும்,” என, அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் நேற்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. நம் அண்டை நாடான இலங்கை தலைநகர் கொழும்புவில், தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:
இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும் விதமாக, நம் அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறது.
நாட்டில், நீண்ட காலமாக நீடிக்கும் இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஒப்பந்தம், இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டப்படும். சர்வதேச நிதியத்தின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இது மிகவும் முக்கியம்.
சர்வதேச நிதியத்தின் ஒப்பந்தத்தை அமல்படுத்த தேவையான சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, 2024க்குள் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.எந்தவொரு சமூகத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
தமிழர், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாத்து முன்னேற வேண்டும்.
அதை அடைவதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். 2048ல், நாட்டின் 100வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் போது, இலங்கையை முன்னேறிய பொருளாதாரம் உள்ள நாடாக மாற்ற வேண்டும். அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement