#தமிழ்நாடு | சரக்கு கேட்ட மனைவி! போட்டு தள்ளி குழிதோண்டி புதைத்த கணவன்!

கும்முடி பூண்டி அருகே தனக்கு மது வாங்கி மது வாங்கித் தரவில்லை என்று தகராறு செய்த மனைவியை கணவனே அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்பிடு பூண்டி அருகே கரடிப்புத்தூர் தனியார் மாந்தோப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 27ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் லட்சுமியின் கணவன் தர்மையாவை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய கிடுக்குப்புடி விசாரணையில் கொலைக்கான கரணம் வெளிவந்துள்ளது. அதன்படி, லட்சுமியும், தர்மையாவும் ஒன்றாக மது குடிப்பதை பழக்கமாக வைத்து இருந்துள்ளனர்.

மேலும், லட்சுமி தனக்கு மது வாங்கித் தராத ஆத்திரத்தில் சமையல் எதுவும் செய்யாமல் போர் கொடி தூக்கி வருவதும், மது வாங்கி கொடுத்தால் மட்டுமே சமைத்து போட முடியும் என்று லட்சுமி தர்மையாவிடம் பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், பூச்சி மருந்து குடித்துவிட்டதாக கணவனை மிரட்டி நாடகமாடுவதும் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்றும் இதேபோல் லட்சுமி தகராறில் ஈடுபட, கடுமையான ஆத்திரத்தில் இருந்த தர்மையா, லட்சுமியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார். 

பின்னர் அவரை யாருக்கும் தெரியாமல் மாந்தோப்பில் புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் தர்மையாவை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.