சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் பழைய ஐ-ட்ரீம் தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் வட சென்னையின் முக்கிய பிரமுகர்களின் ஐட்ரீம் மூர்த்தியுடையது. இந்த நிலையில் இன்று இந்த தியேட்டரில் பொன்னியின் செல்வன் 2 படத்தை காண வந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 7 பேர் டிக்கெட் வாங்க கவுண்டருக்கு சென்றனர்.
அங்கு இவர்களுக்கு 4 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது 4 டிக்கெட்டுகள் இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊழியர்கள் வேண்டுமென்றே தங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததாக நரிக்குறவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக எல்எல்ஏ-வுக்கு சொந்தமான தியேட்டரில் நரிக்குறவர் மக்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சி அளித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னை ரோகினி தியேட்டரில் பத்து தல படம் பார்க்க சென்ற நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்துக்கு தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் கொடுக்க மறுத்தனர். பின்னர் அந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த ரோகினி நிர்வாகம் ” பத்து தல திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. A சான்றிதழ் உள்ள படத்தை 12 வயத்துக்குட்பட்டவர்கள் திரையரங்கில் பார்க்க அனுமதி கிடையாது. வீடியோவில் இருந்த பெண்மணி 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது, டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்கள் இந்த அடிப்படையில்தான் சிறுவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்” என கூறியது.
ஐட்ரீம் மூர்த்தி
திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி பாரம்பரியமாகவே கோடீஸ்வரர். தியேட்டர், சினிமா தயாரிப்பு, ரியல்எஸ்டேட் என பல தொழில்களை செய்து வருகிறார். கடந்த 2021 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக நின்ற ஐட்ரீம் மூர்த்தி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். முன்னதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.112.2 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.