தும்கூர், கர்நாடகா கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தும்கூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றினார். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, ”பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, கர்நாடகா பற்றி பேசவில்லை. அவரைப் பற்றியே பேசுகிறார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் […]