சென்னை : மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ந் தேதி தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் ஒரு நாள் முன்பே வெளியானதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார்.
இதில் உதயநிதி ஸ்டாலின், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
எதிர்பார்க்கும் ரசிகர்கள் : மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய அரசியலை அழுத்தமாக பேசும் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாரின் கடைசி படம் என்பதால் அவரது நடிப்பை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மாஸ் பர்ஸ்ட் லுக் : இதையடுத்து, மாமன்னன் திரைப்படத்தின் போஸ்டர் மே 1ந் தேதி காலை வெளியாகும் என்று படக்குழு புது போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது. அந்த போஸ்டரில் ஷூட்கோட் போட்டுக்கொண்டு உதயநிதி மாஸாக இருந்தார். இந்த போஸ்டரே பர்ஸ்ட் லுக் போல இருக்கு என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், ஏப்ரல் 30ந் தேதியே யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இவ்வளவு பயமா? மே 1ந் தேதி காலை வெளியாகும் என்று அறிவித்துவிட்டு ஏப்ரல் 30ந் தேதியே வெளியிட என்ன காரணம் என ரசிகர்கள் புலம்பிவந்த நிலையில், அஜித்தின் 62 திரைப்படம் குறித்த அறிவிப்பு நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வந்ததால், மாமன்னன் தனது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு நாள் முன்பாகவே வெளியிட்டுவிட்டது. இதைப்பார்த்த , ரசிகர்கள் அஜித் மேல் உதயநிதிக்கு இவ்வளவு பயமா என கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
படக்குழுவின் தெளிவான முடிவு : உதயநிதியின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தை ஹிட் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த படத்துடன் எந்த படமும் போட்டிக்கு வராதவகையில் தனியாக படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மாமன்னன் படத்தின் வசூலில் வேறு எந்த படமும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் படக்குழு மிகவும் தெளிவாக இருக்கிறது.