சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “திருச்சி மாநாடு பெரும் வரவேற்பை பெற்று, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மற்றும் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
Story first published: Monday, May 1, 2023, 11:37 [IST]