வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக 14 மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது. பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை நமது பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தி, பயங்கரவாத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். இருந்தாலும், அதில் சில நேரங்களில் வீரர்கள் தரப்பு உயிரிழப்புகளும் நேர்கிறது. இந்த நிலையில், பயங்கரவாதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும், சதித்திட்டம் தீட்டுவதற்கும் சில மொபைல் ஆப்களை பயன்படுத்தியது உளவுத்துறைக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அந்த மொபைல் ஆப்களை தடை செய்யுமாறு சம்மந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உளவுத்துறை கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, பயங்கரவாதத்தை ஊக்குவித்த 14 மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரி தரப்பில் கூறியதாவது: இந்த மொபைல் ஆப்கள் காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்புக்கொள்ள பயன்படுத்தியது தெரியவந்தது.
அதனை ஆய்வு செய்ததில் அந்த ஆப்கள் இந்தியாவில் இருந்து செயல்படும் ஆப்கள் இல்லை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் 14 ஆப்களை தடை செய்யுமாறு உளவுத்துறை விடுத்த கோரிக்கையை அடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, பிரிவு 69ஏ-ன் கீழ் அந்த ஆப்களை அரசு முடக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முடக்கப்பட்ட 14 ஆப்கள்:
Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement