திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு பாஜக – இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே அடிதடி சண்டை நிகழ்ந்தது. இருதரப்பிற்கும் முன்விரோதம் இருந்துவந்த நிலையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி மோதலாக மாறிய நிலையில் தாராபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்பாக பாஜக – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கட்டை கம்பிகளைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். […]