சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற இந்தோ- திபத் எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்ற போது மயங்கி விழுந்த 2 இளைஞர்களின் கை, கால்களை கட்டி வைத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இழுப்பக்குடியில் உள்ள எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சையின் போது இளைஞர்கள் மூர்க்கத்தனமாக நடந்துக் கொண்டதால் அவர்களின் கை, கால்களை படுக்கையோடு கட்டி வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஏன், அவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதற்கு மருத்துவர்கள் விளக்கமும் அளித்தனர். ஒரு மனிதன் காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது, அதிகமான எனர்ஜியை செலவு செய்து ஓடும் போது உடம்பில் உள்ள Delirium due to Electrolyte imbalance குறைந்து மூர்க்கத்தனம் உண்டாவது சாதாரணமானது தான் என மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.