‘மாஸ்டர் செஃப்’ எனும் உலகப் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் நடுவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மாஸ்டர் செஃப்’ எனும் சமையல் நிகழ்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் ஒளிபரப்பாகிறது. அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளில் இந்த நிகழ்ச்சியை பிரபலமானதை அடுத்து தமிழிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
மிகவும் பிரம்மாண்டமான செட்களில் கைதேர்ந்த வல்லுநர்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் ஆஸ்திரேலியா பதிப்பின் நடுவராக இருந்த ஜாக்(46) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணத்துக்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in