நாய்களின் நன்றி மறவாமைக்கு மேலும் ஒரு சான்றாக, வட அயர்லாந்தில், கோல்டன் ரெட்ரீவர் (Golden Retriever) நாய் ஒன்று, 27 நாட்கள், இரவு பகலாக அலைந்து, 64 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பழைய உரிமையாளரின் வீட்டை தேடிக்கண்டுபிடித்து தஞ்சமடைந்துள்ளது.
டெர்ரி நகரைச் சேர்ந்த ஒருவர், தனது கோல்டன் ரெட்ரீவர் நாயை பிளெமிங் என்பவரிடம் விற்றுள்ளார்.
அங்கிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளெமிங்கின் வீட்டை அடைந்ததும் அந்த நாய் காரிலிருந்து வெளியே குதித்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பிளெமிங் நாயைத் தேடிவந்தபோது, அது சாலைகளையும், காடு, கழனிகளையும், கால்நடையாகவே கடந்து பழைய உரிமையாளரின் வீட்டிற்கு சென்றுள்ளது தெரியவந்தது.
அதனை பிளெமிங், தனது வீட்டிற்கு அழைந்துவந்து கண்ணும் கருத்துமாக பராமரித்துவருகிறார்.