சென்னை : பாலிவுட் நடிகையான பூஜா பலேக்கரின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
மாடல் அழகியான பூஜா பலேகர் மும்பை மாநிலம் மகாராஷ்டிராவில் 1994ம் ஆண்டு பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், தற்காப்பு கலைஞர் மற்றும் டேக்வாண்டோ பயிற்சியாளராக இருந்தார்.
பூஜா பலேக்கர் : மகாராஷ்டிரா சப்-ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்த பூஜா பலேக்கர், சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் “லட்கி: டிராகன் கேர்ள்” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என மொழிகளில் வெளியானது.

லட்கி : லேடி புரூஸ் லீ என்ற அடைமொழியுடன் லட்கி படத்தில் அறிமுகமான இவர், அதிரடியான சண்டை காட்சியிலும் ஏகத்திற்கும் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை என்றாலும், இப்படத்தால் இவருக்கு பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

கவர்ச்சி தரிசனம் : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பிகினி தரிசனம் கொடுத்து வரும் இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். பட வாய்ப்பு இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராம் மூலம் கணிசமான வருமானத்தை பார்த்து வரும் பூஜா பலேக்கர், அண்மையில், குட்டி டவுசர் பட்டனை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைத்துள்ளார்.
இது என்ன உடம்பா? தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருப்பு நிற கவர்ச்சியான உடையில் காலை தூக்கி கவர்ச்சி தரிசனம் காட்டி உள்ளார். இந்த அதிரிபுதிரியான புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இதயத்தை பரிசாக அளித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் இது என்ன உடம்பா? என கேட்டு வருகின்றனர்.