இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரிஜ்பூஷன் ஷரண்சிங் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து இன்று ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின் ” இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த ட்வீட் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்துள்ள வேளையில், மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார். அதற்கு காரணம், எம்பி அப்துல்லா ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் திமுகவை விமர்சிப்பவர்களை எதிர் கருத்தால் தாக்குவதாக நினைத்து ஒருமையில், ஆபாசமாகவும் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். அப்படி இவர் போட்ட பழைய ட்வீட்களை சோனியா அருண்குமார் என்பவர் திரும்ப பகிர்ந்து ” கைக்கு அஞ்சு வாய்க்கு பத்து ஆபாச ட்ரோல் மாஸ்டர் எம்பிகிட்டருந்து எங்க சுயமரியாதைய காப்பாத்திக்கிற நிலைமைதான் போயிட்ருக்கு. இதுல” என்று பதிவிட்டுள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கருக்கும், எம்பி அப்துல்லாவுக்கும் டிவிட்டரில் அடிக்கடி கருத்து மோதல் இருந்து வருகிறது. அந்த சமயத்தில் எம்பி அப்துல்லா சவுக்கு சங்கரை ” தன்னை பிம்ப் ( மாமா வேலை பார்ப்பவர்) போல சின்னமலை ஐ.டி டீம் ஃபோட்டோஷாப் செய்ததாக சவுக்கு சொல்கிறாரே? சின்னமலை டீம் செய்து இருந்தால் மெரினா பீச் பின்ணணியில் ‘கைக்கு அஞ்சு வாய்க்கு பத்து’ என போட்டு இருப்பார்கள். இவ்வளவு டீசண்டா பண்ணிருக்க மாட்டாங்க!! எனவே அவர்கள் அல்ல” என்று அருவருப்பான வார்த்தைகளால் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், பாலியல் தொல்லை சம்பவத்தில் டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எம்பி அப்துல்லா திமுக சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்ததாக முதல்வர் பதிவிட்ட ட்வீட்டுக்கு, எம்பி-யின் பழைய ட்வீட்டுகளை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.