பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூடும் விழாவில், மன்னருக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதி மொழி ஏற்க உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
உறுதி மொழி ஏற்க மக்களுக்கு அழைப்பு
குறித்த விவகாரத்தில் தற்போது கேன்டர்பரியின் பேராயர் அலுவலகம் பதிலளித்துள்ளது. அதில், சார்லஸ் மன்னர் முடிசூடும் விழாவில் உறுதி மொழி ஏற்க மக்களுக்கு அழைப்பு மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது, அது எதிர்பார்ப்பு அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
@getty
சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா நிகழ்வுகள் வெஸ்ட்மின்ஸ்டர் குருமடாலயத்தில் 2,000 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த விழாவின் ஒருபகுதியாக மன்னருக்கு விசுவாசமாக இருப்போம் என்ற உறுதி மொழியும் ஏற்கப்படும்.
பிரித்தானிய மக்களும் அந்த உறுதி மொழியை ஏற்கும் நிலையில், உலகமெங்கும் உள்ள சார்லஸ் மன்னரின் ஆதரவாளர்களும் அந்த உறுதி மொழியை ஏற்கலாம் என குறிப்பிட்டிருந்தனர்.
@getty
பொதுவாக பரம்பரை சகாக்கள் மண்டியிட்டு மன்னரிடம் நேரில் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். குறித்த நிகழ்வானது சுமார் ஒருமணி நேரம் நீளும்.
ஆனால் தற்போது அப்படியான ஒரு நிகழ்வு கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன்
மேலும், ஒரு ஜனநாயக நாட்டில் அதன் தலைவர் தான் மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என சத்தியம் செய்ய வேண்டும், மாறாக மக்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற அபத்தங்கள் முதலாம் எலிசபெத் ராணியாருடன் முடிவுக்கு வந்துவிட்டது, ஏன் தற்போது அப்படியான ஒரு உறுதி மொழியை மன்னர் சார்லஸ் எதிர்பார்க்கிறார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
@Shutterstock
மேலும், உலக நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் முடிசூட்டு விழா நிகழ்வுகளை பார்வையிடுவார்கள், அவர்கலும் மன்னருக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதி மொழி ஏற்க வேண்டுமா எனவும் சமூக ஊடக பக்கங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.