இந்தியாவின் முக்கியமான அண்டை நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. அங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதல் 3 நாட்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சாலிஹ், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித், பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா தீதி ஆகியோரை ராஜ்நாத் நாத் சிங் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இந்த பயணத்தின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விரைவு ரோந்து கப்பல் மற்றும் கடற்கரையில் வாகனங்களும், வீரர்களும் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தரையிறங்கு கப்பல் ஆகியவற்றை ராஜ்நாத் சிங் பரிசாக அளிக்கிறார். இரு நாடுகள் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் இந்தப் பயணம் முக்கியமானதாக இருக்கும் என ராஜ்நாத் கூறியுள்ளார்.