மீண்டும் மாநாடு போடும் ஓபிஎஸ் – அடுத்தகட்ட நகர்வு: பாஜகவுக்கு கண்டனம்!

பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பு செய்த விவகாரத்தில்

தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

ஓபிஎஸ் தரப்பில் நடைபெறும் மாநாட்டிற்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் பயணம்!

அதிமுக உட்கட்சி மோதல் தொடர்ந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கிலும் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பொதுச் செயலாளாராக

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையமும் அதை அங்கீகரித்தது.

திருச்சி மாநாடு எப்படி இருந்தது?

இந்த சூழலில் மக்கள் மன்றத்தில் ஆதரவு திரட்டுவதற்காக திருச்சியில் முப்பெரும் விழாவை ஓபிஎஸ் தரப்பு நடத்தியது. அதிமுக தொண்டர்கள் கூடவில்லை. பணம் கொடுத்து ஆள்கள் திரட்டப்பட்டனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் திருச்சி முப்பெரும் விழா மாநாடு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

“திருச்சி மாநாடு மாபெரும் வரவேற்பை பெற்று, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் மாவட்டங்கள் வாரியாக சுற்றுப்பயணம் மற்றும் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும். மண்டல மாநாடு, மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வது குறித்து இன்று ஆலோசனை செய்ய உள்ளோம்” என்று கூறினார்.

கர்நாடகா – தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்!

கர்நாடகாவின் ஷிவமொக்கா நகரில் இன்று மாலை பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் ஷிவமொக்கா பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா, அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பட்டது.

அப்போது, திடீரென பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா கையை உயர்த்தி பயங்கரமாக சத்தம் போட்டார். பின்னர், மைக் அருகே சென்ற அவர், யார் தமிழ்தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பியது எனக் கூறி கடுமையாக திட்டினார். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே தமிழ்தாய் வாழ்த்தை நிறுத்தி, கன்னட நாட்டு கீதத்தை ஒலிக்கச் செய்தனர்.

ஓபிஎஸ் ரியாக்‌ஷன்!

இந்த சம்பவம் நிகழ்ந்த போது, அண்ணாமலை மேடையில் நின்று கொண்டிருந்தார். எனினும், தமிழ்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டதற்கு அவர் எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை. இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இது குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

“கர்நாடகாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.