பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அடியோவிற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்து, இந்த ஆடியோ போலியானது, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எனது குரல் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளித்து இருந்தார்.
இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை. இது போன்ற பல ஆடியோக்கள் வரலாம், அதனால் எனது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்காக திமுக வழக்கு தொடராது என்று, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால், தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டுமே தவிர, திமுக அதற்காக வழக்கு தொடுக்காது என்று டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆடியோ போலியானது என்று பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் தான் புகார் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனிப்பட்ட முறையில் என்றால் பிடிஆர் மேல் வழக்கு தொடருட்டுமே என்று, பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, டி, கே.எஸ்.இளங்கோவனுக்கு பதில் கொடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், “ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால் பி டி ஆர் தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்கிறார், தி மு க தொடுக்காது – டி, கே.எஸ்.இளங்கோவன்.
முதல்வரின் மகன், மருமகன் குறித்து தனிப்பட்ட முறையில் பேசப்பட்டது என்றால் தனிப்பட்ட முறையில் மகனும், மருமகனும் பி டி ஆர் மேல் வழக்கு தொடரட்டுமே” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.