மேகன் என்னைக் கொன்றுவிட்டார், அவரே என்னைக் கொன்று விட்டு, இப்போது அவரே எனக்காக துக்கம் அனுஷ்டிக்கிறார் என்று கூறியுள்ளார் மேகனுடைய தந்தையான தாமஸ் மார்க்கல்.
மேகன் குடும்பத்தினரின் பேட்டி
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகனுடைய குடும்பத்தினர், ஆவணப்படம் ஒன்றிற்காக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.
மேகன் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களும், புகைப்படங்களும் அடங்கிய அந்த பேட்டி, ஆவணப்படமாக வெளியாக உள்ளது.
அதில், மேகனுடைய தந்தை, சகோதரி, சகோதரர் ஆகியோர் மேகன் குறித்த தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.
மேகன் என்னைக் கொன்றுவிட்டார்
அந்த ஆவணப்படத்தில், மேகன் என்னைக் கொன்றுவிட்டார், கொன்றுவிட்டு அவரே எனக்காக துக்கம் அனுஷ்டிக்கிறார் என மேகனுடைய தந்தையான தாமஸ் மார்க்கல் கூறும் காட்சி ஒன்று இடம்பெறுகிறது.
மேகன், இளவரசர் ஹரியைத் திருமணம் செய்ததிலிருந்தே அவருக்கும் அவரது தந்தைக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மேகன் ராஜ குடும்பத்துக்குள் காலடி வைத்த பிறகு, மேகனையோ அவரது பிள்ளைகளையோ அவரது தந்தை தாமஸ் சந்திக்கவேயில்லை. அதாவது, மேகன் தன் குடும்பத்தினரை சந்திக்கவேயில்லை.
இந்நிலையில்தான், ஆவணப்படம் ஒன்றிற்காக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தாமஸ், மேகன் என்னைக் கொன்றுவிட்டார், கொன்றுவிட்டு அவரே எனக்காக துக்கம் அனுஷ்டிக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேகன் குடும்பத்தினர் பங்கேற்றுள்ள அந்த ஆவணப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
Credit: 7 News
Credit: 7 News
Credit: 7 News
Credit: The Mega Agency