சென்னை : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தாறுமாறாக இறங்கி ஆட்டம் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
நடிகை ரேஸ்மாவிற்கு என்று இணையத்தில் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் என்ன பதிவு போட்டாலும் அதற்கு தவறாமல் லைக்களை தட்டிவிட்டு, இளசுகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இளசுகள் இருக்கும் தைரியத்தால், தாராள மனம் கொண்ட ரேஷ்மாக கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார்.
யாருப்பா அந்த புஷ்பா : வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மாவுக்கு அந்த கதாபாத்திரம் நன்றாக கை கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகுதான் யாருப்பா அந்த புஷ்பா என்று ரசிகர்கள் பலர் இணையத்தை தேடினார்கள். அந்த படத்திற்கு பின் விஜய் டிவியில் பாக்யலட்சுமி சிரீயலில் கோபியிடம் ஏமாந்து போகும் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார்.
மனதில் இடம் பிடித்தார்: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்த புஷ்பாவா இது என அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் கதை போக போக வில்லியாகவே மிரட்டினார். இதுதவிர ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகி உள்ள சீதா ராமன் என்கிற தொடரிலும் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார்.
சுவாரசியமான பேட்டி: நடிகை ரேஷ்மா அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். இதில், தனது சொந்த வாழ்க்கை குறித்தும் சினிமா வாழ்க்கை குறித்தும் அழகாக பதில் அளித்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பல ரசிகர்கள் விவகாரமான கேள்வி கேட்டபோதும், தயக்கமே இல்லாமல் அழகாக பதில் அளித்து இருந்தார். இந்த பேட்டிக்கு பிறகு ரேஸ்மாவின் ரசிகர் வட்டாரம் கணிசமாக அதிகரித்தது.
வத்திக்குச்சி இல்லாமலே : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னையே நம்பி இருக்கும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரேஷ்மா தற்போது, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வரும் உனக்குள் நானே உருகும் பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடி உள்ளார். அந்த நடனத்தைப் பார்த்த ரசிகர்கள் வத்திக்குச்சி இல்லாமலே பத்திக்கிச்சி ரேஷ்மா… என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ வெளியிட்ட ஒரு மணிநேரத்தில், ஐந்து ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குளை பெற்று வருகிறது.