விஷ்ணு விஷாலுக்கு பதிலாக ஹிப் ஹாப் ஆதி
நடிகர் விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‛இன்று நேற்று நாளை'. மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரவிக்குமார் இயக்கினார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் இந்த படத்தில் இப்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமாரின் உதவி இயக்குனர் இயக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.