சென்னை : அஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வேதாளம் தெலுங்கு ரீமேக் பட ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அஜித்தின் அடுத்தப்படாமன இத்திரைப்படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் இணையத்தில் அதனை கொண்டாடி வருகின்றனர்.
வேதாளம் : அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு கடும் போட்டி நிலவியது.

வேதாளம் தெலுங்கு ரீமேக் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் மெஹர் ரமேஷ் நடிப்பில் உருவாகி வேதாளம் தெலுங்கு ரீமேக் உருவாகி வருகிறது.இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கும் நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவி தங்கையாக நடிக்கிறார். இப்படத்திற்கு தெலுங்கில் போலா சங்கர் என தலைப்புவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இருந்து சிரஞ்சீவி மாஸ் லுக்கில் இருக்கும் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

போலா சங்கர் ரிலீஸ் தேதி : இந்நிலையில், அஜித்தின் பிறந்த நாளான இன்று வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சிரஞ்சீவி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். போலா சங்கர் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ராமபிரம் சுங்கராவின் கீழ் அனில் சுங்கரா தயாரித்து வருகிறார்.

வீரம் இந்தி ரீமேக் : அஜித் நடித்து வெற்றி பெற்ற வீரம் திரைப்படம் இந்தி திரைப்படம் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் ரம்ஜான் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம். இதுவரை உலக அளவில் ரூ.151.12 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.