ஸ்பெயினில் நடுவானில் மோதிக்கொண்ட 2 விமானங்கள்: 4 பேர் வரை உயிரிழப்பு


ஸ்பெயினில் உள்ள ஏரோட்ரோம் அருகே 2 அல்ட்ரா லைட் விமானங்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் வரை கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானங்கள் மோதல்

வடகிழக்கு ஸ்பெயினின் ஏரோட்ரோம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரண்டு அல்ட்ரா லைட் விமானங்கள் வானில் மோதிக் கொண்டதை அடுத்து நான்கு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

விமானங்கள் விபத்துக்குள்ளானதை பார்த்த சாட்சி ஒன்று எழுப்பி எச்சரிக்கையை தொடர்ந்து, பிராந்திய அரசாங்க அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

ஸ்பெயினில் நடுவானில் மோதிக்கொண்ட 2 விமானங்கள்: 4 பேர் வரை உயிரிழப்பு | 2 Planes Collides In Spain 4 People DeadAFP

முதல் விமானம் பார்சிலோனாவின் வடக்கு மோயா ஏரோட்ரோம் அருகே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பதை தீயணைப்பு வீரர்கள் முதலில் கண்டுபிடித்தனர்.

அத்துடன் விமானத்தின் தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் அதிலிருந்து இரண்டு உடல்களை மீட்டனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது விமானம்

 பல மணி நேரங்களுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் சேதமடைந்த இரண்டாவது விமானத்தை முதல் விமானத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கண்டுபிடித்தனர். 

ஸ்பெயினில் நடுவானில் மோதிக்கொண்ட 2 விமானங்கள்: 4 பேர் வரை உயிரிழப்பு | 2 Planes Collides In Spain 4 People DeadBishal MAGAR /AFP

அந்த விமானத்தில் இருந்தும் இரண்டு உடல்களை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.

ஆனால் விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரிய வராத நிலையில், விபத்து குறித்து பொலிஸார் மற்றும் சிவில் விமானப் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.