2024 பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க பதிவு துவங்கியது | Registration for 2024 Padma Awards has started.

புதுடில்லி: 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பிக்க பதிவு இன்று துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்தி அரசால் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான பரிந்துரை குறித்த பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்.15 விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.