3 இலவச சிலிண்டர், அரை லிட்டர் நந்தினி பால், ஃப்ரீ செக்-அப்… கர்நாடக பாஜகவின் தேர்தல் அறிக்கை இதோ!

தேர்தல் என்றாலே நமக்கு என்ன லாபம் என்ற பார்வை தான் மக்கள் மத்தியில் எழுகிறது. நேரடியாக தங்கள் கைகளுக்கு கிடைக்கும் சலுகைகள், அடிப்படை தேவைகளில் இலவசங்கள், தொலைநோக்கு திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு அம்சங்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவும். இதற்கு வரும் மே 10ஆம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் விதிவிலக்கல்ல.

பாஜக தேர்தல் அறிக்கை

இந்நிலையில் ’Praja Dhwani’ என்ற பெயரில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு மக்களின் குரல் என்று அர்த்தம். இந்த நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில் இடம்பெற்றுள்ள 10 முக்கியமான விஷயங்களை இங்கே காணலாம்.

முக்கியமான அம்சங்கள்

உகாதி, கணேஷ் உத்சவ், தீபாவளி ஆகிய பண்டிகைகள் வரக்கூடிய மாதங்களில் BPL கார்டு (வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்) வைத்திருக்கும் அனைவருக்கும் மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.ஒவ்வொரு வார்டிலும் குறைந்த விலையில் உணவு கிடைக்கும் வகையில் ’அடல் அகாரா கேந்திரா’ திட்டம் செயல்படுத்தப்படும்.BPL கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.வீடற்ற 10 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்அரசு பள்ளிகள் விஸ்வேஷ்வரய்யா வித்யா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலும் நீக்கப்படும்.மூத்த குடிமக்களுக்கு வருடாந்திர மருத்துவ பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.மைக்ரோ சேமிப்பு கிடங்கு வசதிகளை செய்து தர 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.கல்யாண் கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 1,500 கோடி ரூபாய் செலவிடப்படும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு

இதுதவிர தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) கர்நாடகாவில் விரைவில் அமல்படுத்தப்படும். இதன்மூலம் சட்டவிரோதமாக வசித்து வருபவர்கள் வெளியேற்றப்படுவர் என்று பாஜக தெரிவித்துள்ளது. மேலும் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் குறைகளை தீர்த்து வைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

அதிநவீன பெங்களூரு

இதையொட்டி சிறப்பு வழிகாட்டுதல்கள் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பின்னர் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பெங்களூருவை ஒருங்கிணைந்த, தொழில்நுட்ப வசதிகள், எளிதான போக்குவரத்து அம்சங்கள், பாதுகாப்பான சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கிய நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜகவின் திட்டம்

எங்களின் தேர்தல் அறிக்கை மற்ற கட்சிகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. எங்கள் அறிக்கை கர்நாடக இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள், எஸ்.சி/ எஸ்.டி மக்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.