சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கைக்கு அமைச்சர்கள் குறித்த முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை முக்கியமான அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. அடுத்த வாரம் வெளிநாடு செல்லும் முதல்வர் அதற்கு முன் அமைச்சரவை கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளார்.
இதற்கு முன்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோட்டை வட்டாரத்தில் விசாரித்ததில் சில முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. முக்கியமான 4 விஷயங்களை டார்கெட்டாக வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தை கூட்ட இருக்கிறார்.
விஷயம் 1:முதல் காரணம் முதல்வர் ஸ்டாலின் கைக்கு சென்று இருக்கும் பர்பார்மன்ஸ் ரிப்போர்ட். பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டை வைத்து அமைச்சர்களின் நிறை, குறைகளை முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கு டோஸ் விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இது போக இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்போது அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இது தொடர்பான ரிப்போர்ட் ஒன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளதாம். உளவுத்துறை மூலமாக வழங்கப்பட்ட பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் மூலம் இந்த அமைச்சரவை மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்களின் துறைகள் மாற்றப்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இதை பற்றி நாளை ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள்.
விஷயம் 2:பொதுவாக சில பிரச்சனைகள் பற்றி ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம், மற்ற பல மாவட்டங்களில் பேருந்து நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். முக்கியமாக சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றியும், நிதி நிலைமை ரீதியாக இதில் ஆலோசனை செய்ய உள்ளனர்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை தற்போது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி பேச உள்ளனர்.
முக்கியமாக கடைசியாக திமுகவின் சில அறிவிப்புகள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதை பற்றியும் ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
சில அமைச்சர்களுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். அவசரமாக அமைச்சர்கள் சிலர் எடுத்த முடிவுகளால் வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்படும். அதோடு அமைச்சர்கள் தரப்பு கோரிக்கைகள், அவர்களின் குறைகள் பற்றியும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.
விஷயம் 3:சமீபத்தில் திமுக எம்எல்ஏ வீட்டில் நடந்த ரெய்டு, டெல்லியில் அண்ணாமலை – எடப்பாடி – அமித் ஷா நடத்திய ஆலோசனை ஆகியவை பற்றியும் முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளனர்.
விஷயம் 4:இது போக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளது. சில துறைகளில் இன்னமும் அமைச்சர்கள் – ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் நிற்கவில்லை. இதை பற்றி ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் முதல்வர் பெரும்பாலும் அமைச்சர்கள். ஆனால் இந்த முறை அதை பற்றி கேட்பார் என்று கூறப்படுகிறது.