6 மாத காத்திருப்பு தேவையில்லை விவாகரத்து உடனடியாக வழங்கலாம் – சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு

புதுடெல்லி

விவாகரத்தை உடனடியாக வழங்கலாம் என நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு 5 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

143 வது பிரிவின் கீழ் திருமண உறவு மேம்படவே வழியில்லாத நிலையில், 6 மாத காத்திருப்பு தேவையே இல்லை என்றும் திருமணத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன் பெஞ்ச் கூறியுள்ளது.

இன்று சுப்ரீம் கோர்ட்டு அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் முழுமையான நீதியை வழங்க அதன் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் மற்றும் திருமண பந்ததை மீட்க முடியாத முறிவு உள்ள அடிப்படையில் விவாகாரத்தை உடனடியாக வழங்கலாம் என்று கூறியது.

வழக்கமாக, சுப்ரீம் கோர்ட்டு விவாகரத்துக்கான முறையான உத்தரவுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் தரப்பினரை சம்பந்தப்பட்ட குடும்ப நீதிமன்றங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.

சுப்ரீம் கோர்ட், அரசியல் சட்டத்தின் 142 வது பிரிவின் கீழ், சம்மதமுள்ள தம்பதியினரிடையே முறிந்த திருமணங்களை குடும்ப நீதிமன்றங்களுக்கு அனுப்பாமல், பிரிந்து செல்வதற்கான உத்தரவி பெறுவதற்கு, குடும்ப நீதிமன்றங்களுக்கு அனுப்பாமல் விவகாரத்து வழங்குவது தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று வழங்கியது. .


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.