Ajith: அஜித்துக்கு ஏத்த தலைப்புதான்… விடாமுயற்சியை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்… தெறிக்கும் டிவிட்டர்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகர் அஜித்தின் 62 வது படமான விடாமுயற்சியின் அறிவிப்பால் திக்குமுக்காடி வருகின்றன சமூக வலைதளங்கள்.

அஜித்தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். எந்த சினிமா பின்புலமும் இல்லாத அஜித் சினிமா மீது கொண்ட காதலால் போராடி சினிமா வாய்ப்புகளை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஜித், அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக உயர்ந்தார் நடிகர் அஜித்.
​ Vani Bhojan: சின்னத்திரை நயன்தாரா… வாணி போஜனின் மாடர்ன் க்ளிக்ஸ்!​
விடாமுயற்சிஉலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகர் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பும் தலைப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் 62வது படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.​ பிரமிக்க வைக்கும் ஜோதிகா!​
அனிருத் இசைஇந்த படத்தை ஏற்கனவே வெளியான தகவல்கள்படி இயக்குநர் மகிழ் திருமேனிதான் இயக்குகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இந்த அறிவிப்பை சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
​ Vanitha Vijayakumar: வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!​
ட்ரெண்டிங்ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் அஜித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #AK62, #விடாமுயற்சி #VidaaMuyarchi #AK52 #MagizhThirumeni ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும் அஜித்துக்கு ஏற்ற தலைப்பு என்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
​ Ponniyin Selvan 2: நந்தினி அக்கா… அவிங்கள முடிச்சுறு.. வைரலாகும் பாண்டியர்களின் பேனர்!​
தோற்று போகாதுவிடாமுயற்சி எப்போதும் தோற்று போகாது என்றும், மகிழ் திருமேனி மீது நம்பிக்கை இருக்கிறது என்றும், இந்தப் படம் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
​ Ponniyin Selvan 2: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்… பொன்னியின் செல்வன் 2 வெற்றிக்கான காரணங்கள்! ​
Ajith

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.