ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்த நடிகர் சூர்யா என்ன சொன்னார் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் கார்த்தி.
கல்கியின் பொன்னியின் செல்வன்கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்திருந்தார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம் மாதம் வெளியானது. இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யலட்சுமி, ஷோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Ajith: அஜித்தின் அரிய அன்சீன் போட்டோஸ்… குவியும் லைக்ஸ்!
பொன்னியின் செல்வன் 2பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம், உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 28 ஆம் தேதி வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாகத்தை விடவும் சிறப்பாக இருப்பதாக கூறினர். பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி தள்ளினர் .
Ajith: அஜித்துக்கு ஏத்த தலைப்புதான்… விடாமுயற்சியை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்… தெறிக்கும் டிவிட்டர்!
100 கோடி க்ளப்படம் வெளியான முதல் 2 நாட்களிலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்துள்ளது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம். பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வந்திய தேவனாக நடித்த நடிகர் கார்த்தி படத்தை பார்த்த தனது அண்ணனும் நடிகருமான சூர்யா கூறிய வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.
பிரமிக்க வைக்கும் ஜோதிகா!
படம் பார்த்த சூர்யாபொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வந்திய தேவனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கார்த்தி இரண்டாம் பாகத்திலும் அந்த பெயரை தக்க வைத்துள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தை நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது மாமியார் குடும்பத்தினருடன் சென்று பார்த்த தகவலை கூறியுள்ளார்.
Trisha: மணிரத்னத்துடன் மறக்க முடியாத த்ரிஷாவின் தருணங்கள்… அவரே ஷேர் செய்த போட்டோஸ்!
சூர்யா சொன்ன வார்த்தைபடத்தை பார்த்த சூர்யா, தமிழ் சினிமாவால் சாதிக்க முடியும் என்று சூர்யா பெருமிதத்துடன் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் கார்த்தியின் தந்தை சிவகுமாரை அணுகிய காலத்தையும் நினைவுகூர்ந்தார் கார்த்தி.
Ponniyin Selvan 2: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்… பொன்னியின் செல்வன் 2 வெற்றிக்கான காரணங்கள்!
பிடித்த கதாப்பாத்திரங்கள்தங்களுக்குப் பிடித்த புத்தகத்தின் கதாபாத்திரங்கள் திரையில் உயிருடன் வருவதைப் பார்க்க அவரது குடும்பத்தினர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாக கூறினார். மேலும் அருண்மொழி வர்மனாக தனது தந்தை சிவக்குமார் நடிக்க இருந்த தகவலையும் கூறியுள்ளார் நடிகர் கார்த்தி. நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவனாக நடித்தது தான் செய்த பாக்கியம் என்று தான் பங்கேற்று வரும் நிகழ்ச்சிகளில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
suriya PS2