மிக மலிவான ஸ்ப்ளிட் ஏசி: கோடை காலம் வந்துவிட்டது. இந்த சீசனில், வாட்டும் வெப்பத்திலிருந்து நம்மை காத்து, அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க நமக்கு ஏர் கண்டிஷனர் (ஏசி) தேவைப்படுகிறது. ஆனால் குறைந்த செலவில் ஏசி கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. அதுவும் கோடை காலம் துவங்கிவிட்டால், விற்பனையாளர்களும் ஏசி விலையை வெகுவாக உயர்த்தி விடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் ஏர் கண்டிஷனர் வாங்க விரும்பினால், பெரும்பாலும் குறைந்த நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசிகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், இந்த ஏசி-கள் மின் கட்டணத்தை அதிகப்படுத்துகின்றன.
பிராண்டட் ஏர் கண்டிஷனர்
சாம்சங், ஹிட்டாச்சி, வோல்டாஸ் போன்ற நிறுவனங்களின் ஏர் கண்டிஷனர்கள் பொதுவாக விலை அதிகமாக இருக்கும். கொளுத்தும் வெயிலில் புதிய, பிராண்டட் ஏசி-ஐ வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? ஆனால், உங்கள் பட்ஜெட் குறைவாக உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். சாம்சங் 1 டன் ஸ்டார் ஸ்ப்ளிட் ஏசி -ஐ (Samsung 1 Ton 4 Star Split AC) மிக குறைந்த விலையில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Samsung 1 Ton 4 Star Split AC: சலுகைகள்
சாம்சங் 1 டன் 4 ஸ்டார் ஸ்பிளிட் ஏசியின் எம்ஆர்பி, அதாவது மார்க்கெட்டில் இதன் உண்மையான விலை ரூ.50,990 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த ஏர் கண்டிஷனர் ரூ.29,999 -க்கு கிடைக்கிறது. ஏசியில் 41% தள்ளுபடி வழங்கப்படுகிறது. சலுகைகள் இதோடு நின்றுவிட்டவில்லை. இதற்குப் பிறகு, வங்கி மற்றும் பரிமாற்றச் சலுகைகளும் இதில் இருக்கின்றன. இதன் காரணமாக ஏசியின் விலை கணிசமாகக் குறைக்கப்படும்.
Samsung 1 Ton 4 Star Split AC: பேங்க் ஆஃபர்
இந்த ஏர் கண்டிஷனரை வாங்க வங்கிச்சலுகைகளும் கிடைக்கின்றன. ஐசிஐசிஐ வங்கி அல்லது எச்டிஎஃப்சி வங்கி கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு இந்த விலையில் ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு ஏசியின் விலை ரூ.28,749 ஆக குறைந்துவிடும். அதன் பிறகு பிளிப்கார்ட்டில் ஒரு பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன் மூலம் ஏசியின் விலை மேலும் குறையும்.
Samsung 1 Ton 4 Star Split AC: எக்ஸ்சேஞ் சலுகை
சாம்சங் 1 டன் 4 ஸ்டார் ஸ்பிளிட் ஏசியில் ரூ.8,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஏர் கண்டிஷனரை மாற்றினால் இந்த தள்ளுபடியை அவர்கள் பெற முடியும். இந்த எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்திக்கொண்டால் ஏசியின் விலை ரூ.20,749 ஆக குறையும். எனினும், இந்த எக்ஸ்சேஞ்ச சலுகையை வாடிக்கையாளர்கள் பெற வேண்டுமானால், அதற்கு பழைய ஏர் கண்டிஷனர் நல்ல நிலையிலும் லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஏசி வாங்கும்போது சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:
– ஏர் கண்டிஷனருக்கான உங்களது பட்ஜெட்
– பணம் செலுத்தும் விருப்பங்கள் குறித்து தெளிவு
– ஆன்லைன் / ஆஃபலைன் விலைகளில் உள்ள வித்தியாசம்
– உங்கள் அறைக்கு ஏற்ற ஏசி- ஐ தேர்ந்தெடுக்கும் தெளிவு