Samyuktha :மாலத்தீவில் ஆட்டம் போட்ட கோமாளிப்பட நடிகை.. க்யூட் வீடியோ இதோ!

சென்னை : நடிகை சம்யுக்தா ஹெக்டே கன்னடத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமிழில் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம்ரவியின் காதலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் சம்யுக்தா ஹெக்டே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

மாலத்தீவில் மாஸ் காட்டும் சம்யுக்தா : தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. குறிப்பாக ஜெயம்ரவியின் காதலியாக கோமாளி படத்தில் இவர் நடித்திருந்த கேரக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கன்னட நடிகையான சம்யுக்தாவிற்கு தமிழில் அதிகமான வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது கன்னடத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர் ரிஷப் ஷெட்டி இயக்கிய முக்கியமான படமான கிரிக் பார்ட்டி படத்தின்மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் ரஷிட் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றுள்ளார். இந்தப் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. படம் சிறப்பான வசூலையும் பெற்றது. தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஸ் கன்னடம் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார். தெலுங்கிலும் கிர்ராக் பார்ட்டி என்ற படத்தின்மூலம் கடந்த 2018ம் ஆண்டில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார்.

Actress Samyuktha hegdea latest photos in Maldives makes fans enjoying

சமூக வலைதளங்களில் இவர் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவரது பிகினி உள்ளிட்ட புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவரை 13 லட்சம் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

நேற்றைய தினம் டான்சிங் தினத்தையொட்டி, கடலில் நடனமாடும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவிற்கும் ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை கொடுததிருந்தனர். இதனிடையே மாலத்தீவிற்கு சென்றிருக்கும் சம்யுக்தா ஹெக்டே, இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் கடற்கரை மணலில் கவர்ச்சியாக ஆட்டம் போடும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

வசீகரா பாடலும் கடற்கரை மணலில் சம்யுக்தா ஹெக்டே பிகினியில் ஆடியுள்ள வீடியோ, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் பயணம் சிறப்பாக அமைந்ததாகவும், புதிய நண்பர்களை கொடுத்துள்ளதாகவும், மரத்தில் ஏறும் அனுபவங்களையும் கொடுத்ததாகவும் சம்யுக்தா தெரிவித்துள்ளார். தன்னை தீவுப் பெண் என்றும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா. இவரது கலக்கல் நடனங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.