Simbu: சிம்பு குடும்பத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன இயக்குநர்… நடுத்தெருவுக்கு வந்தது தான் மிச்சம்!

சென்னை: சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தத் திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிம்பு குடும்பத்தினரால் நொந்து நூடுல்ஸ் ஆன இயக்குநர் ஒருவரின் நிலை தற்போது தெரியவந்துள்ளது.

சிம்பு குடும்பத்தால் நொந்து நூடுல்ஸான இயக்குநர்:மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின்னர் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, அடுத்தடுத்து முக்கியமான இயக்குநர்களுடன் கமிட் ஆகி வருகிறார். கெளதம் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கிருஷ்ணா இயக்கிய பத்து தல படங்களில் கேங்ஸ்டராக நடித்து தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள STR 48 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிம்பு குடும்பத்தால் ஒரு இயக்குநர் நொந்து நூடுல்ஸ் ஆன கதை தற்போது தெரியவந்துள்ளது.

சிம்பு இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமலின் சிகப்பு ரோஜாக்கள் ஃபார்முலாவில் சைக்கோ க்ரைம் திரில்லர் படமாக வெளியான மன்மதன், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் செம்ம ஹிட்டாகின.

இந்தப் படத்தை முருகன் என்பவர் இயக்கியிருந்தார். நீ வருவாயா என படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய முருகன், மன்மதன் படத்தின் கதையை முதலில் அஜித்திடம் தான் கூறினாராம். ஆனால், ஏற்கனவே டபுள் ஹீரோ சப்ஜக்ட்டான வாலி படத்தில் ஆண்டி நெகட்டிவ் ரோலில் நடித்துவிட்டதால் மறுத்துவிட்டாராம். அதனால், இந்தக் கதையை சிம்புவிடம் கூறியுள்ளார் முருகன்.

 Simbu: Manmadhan film director Murugan cheated by Simbus family

ஆனால், சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் மன்மதன் படத்தின் கதை, திரைக்கதையை சிலம்பரசனும் சேர்ந்து எழுதியதாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளாராம். அதற்கு இயக்குநர் முருகன் ஓக்கே சொன்ன பிறகே மன்மதன் படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. ஆனால், படம் வெளியாகும் போது கதை, திரைக்கதை போர்ஷன் சிம்பு எழுதியதாகவே மாற்றப்பட்டிருந்ததாம்.

கடைசியில் மன்மதன் படத்தின் வெற்றியால் சிம்புவின் கேரியர் டாப் கியரில் எகிறியுள்ளது. ஆனால் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த இயக்குநர் முருகனுக்கு இதனால் எந்த பெயரும் கிடைக்காமல் போய்விட்டது. அதுமட்டும் இல்லாமல் மன்மதன் படத்துடன் இயக்குநர் முருகனும் ஆல் அட்ரஸே இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.