தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்தடுத்து மாவீரன், அயலான் படங்கள் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர். சினிமாவில் பிசியாக இருந்தாலும் சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்கள் வெளியானது. இதில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படம் 100 கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது. இதனையடுத்து தெலுங்கில் தடம் பதித்த சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு மொழியில் உருவான ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கடந்த தீபாவளி வெளியீடாக ரிலீசான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இதனால் படம் ரிலீசான ஒரே வாரத்தில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ‘மாவீரன்’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தை எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்தப்படத்தில் அதிதி ஷங்கர், பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
VidaaMuyarchi: மீண்டும் ‘அந்த’ செண்டிமென்ட்டை கையிலெடுத்த ஏகே: நள்ளிரவில் வெளியான அதிரடி அறிவிப்பு.!
இதனிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் ‘அயலான்’ படத்தின் வெளியீட்டு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன், சயின்ஸ் பிக்ஸன் படமாக ‘அயலான்’ உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகார், கருணாகரன், யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Leo Update: ‘லியோ’ பட அப்டேட் கொடுத்த மிஷ்கின்: ஹாப்பியான தளபதி ரசிகாஸ்.!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘அயலான்’ படம் வரும் தீபாவளி ரிலீசாக வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் திடீரென ட்விட்டரில் இருந்து சிறிது காலம் விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது படங்கள் குறித்த அறிவிப்பை தன்னுடைய குழுவினர்கள் வெளியிடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.