அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைடப்படம் வெளியானது. ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் வங்கிகள் மக்களிடம் நடத்தும் மோசடியை துணிச்சலாக பேசியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 330 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியது. அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்க உள்ளார் என்றும் லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் முதலில் தகவல்கள் வெளியான. விக்னேஷ் சிவனும் ஏகே 62 தொடர்பான தகவல்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்து சூர்யா என்ன சொன்னார்? வெளிப்படையாக கூறிய கார்த்தி!
பின்னர் விக்னேஷ் சிவன் கூறிய கதையில் திருப்தி இல்லாததால் ஏகே 62 புராஜெக்ட்டில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்படுவதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஏகே 62 படம் குறித்து ஷேர் செய்திருந்த பதிவுகளை நீக்கினார். இதனை தொடர்ந்து தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனிதான் ஏகே 62 படத்தை இயக்கப்போவதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.
கடந்த மாதமே அஜித்தின் ஏகே 62 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்தின் தந்தை காலமானார். இதனால் ஏகே 62 படம் குறித்த அறிவிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் மே ஒன்றாம் தேதியான இன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
Ajith: அஜித்தின் அரிய அன்சீன் போட்டோஸ்… குவியும் லைக்ஸ்!
இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித் பிறந்தநாளில் அவரது படம் குறித்த அறிவிப்பு வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனியின் டிவிட் கவனத்தை பெற்றுள்ளது.
அதில், விடாமுயற்சி டைட்டில் லுக்கை ஷேர் செய்துள்ள மகிழ் திருமேனி, கனவு நனவாகும் தருணம்… கண்டிப்பான சம்பவம் இருக்கும். விடாமுயற்சி தோற்பதில்லை… பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் சார் என பதிவிட்டுள்ளார். மகிழ் திருமேனியின் இந்த டிவிட் இணையத்தை பெரும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ் திருமேனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Ajith: அஜித்துக்கு ஏத்த தலைப்புதான்… விடாமுயற்சியை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்… தெறிக்கும் டிவிட்டர்!
இப்படத்தின் ப்ரீ புரடெக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட்டும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.