ஒரு வழியாக அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் ஒவ்வொரு பட வெளியீட்டையும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்பு தலைப்புடன் வெளியாகியுள்ளது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
கடந்த பொங்கலன்று அஜித் நடிப்பில் ‘துணிவு’ படம் வெளியானது. மூன்றாவது முறையாக போனி கபூர், எச். வினோத், அஜித் கூட்டணியில் இந்தப்படம் வெளியானது. இவர்கள் கூட்டணியில் முன்னதாக வெளியான ‘வலிமை’ படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்த நிலையில் ‘துணிவு’ படம் அதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக ரிலீசானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் ஜானராக வெளியான ‘துணிவு’ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படம் ரிலீசாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் சோத்தை ஏற்படுத்தியது. ‘துணிவு’ பட ரிலீசுக்கு முன்பாகவே ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென ‘ஏகே 62’ படத்திலிருந்து விக்கி விலகினார். அவரின் கதை தயாரிப்பு தரப்புக்கு பிடிக்காததால் அவர் இந்த புராஜெக்டில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. இதனையடுத்து அண்மையில் விக்னேஷ் சிவனும், இதற்கும் அஜித்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தயாரிப்பு தரப்புக்கு கதை பிடிக்காத காரணத்தால் ‘ஏகே 62’ படத்திலிருந்து தான் விலகியதாக தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல்.. முதல் பாகத்தின் கலெக்ஷன் சாதனையை முறியடித்ததா.?
இதனையடுத்து ‘ஏகே 62’ படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கன்பார்ம் ஆனாலும் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தது. இந்நிலையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஏகே 62’ பட அறிவிப்பு டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. அதன்படி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த அறிவிப்பை லைகா நிறுவனம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 வெளியிட்டது. இதனை சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். ‘துணிவு’ படத்திற்கு முன்பாக தொடர்ந்து ‘வி’ யில் ஆரம்பிக்கும் டைட்டில் கொண்ட படங்களில் நடித்தார் அஜித். இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் மூலம் மீண்டும் ‘வி’ சென்டிமெண்டுக்கு அஜித் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Maamannan: உதயண்ணாவின் கடைசி படம்: ‘மாமன்னன்’ படக்குழுவின் அதிரடி அறிவிப்பு.!