ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இன்று அஜித் தன் 52 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் AK62 திரைப்படம் உருவாகப்போகின்றது என்ற தகவல் கடந்த ஜனவரி மாதமே கசிந்துவிட்டது.
இருந்தாலும் படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே ரசிகர்கள் வலிமை படத்தின் அறிவிப்பிற்காக தவம் கிடந்தது போல AK62 அறிவிப்பிற்காகவும் ஏங்கி தவித்தனர். இந்நிலையில் அஜித் மகிழ் திருமேனியிடம் முழு கதையையும் தயார் செய்ய சொல்லியதாகவும், முழு கதையையும் கேட்ட பிறகு தான் படத்தின் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கூறிவிட்டாராம்.
Leo: லியோ படத்தை பற்றி பிரபல நடிகர் கூறிய தகவல்..உச்சகட்ட ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!
எனவே தான் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக தாமதமானதாக தகவல்கள் வருகின்றன. தற்போது ஒருவழியாக மகிழ் திருமேனி முழு கதையையும் தயார் செய்துவிட்டாராம். ஹாலிவுட் தரத்தில் ஒரு திரில்லர் கதையை மகிழ் திருமேனி உருவாக்கியுள்ளதாக தெரிகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் தற்போது இபபடத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை AK62 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அஜித் மீண்டும் V சென்டிமெண்டை பின்தொடர்வதாகவும் சிலர் பேசி வருகின்றனர்.
இந்த டைட்டிலுக்கு கலவையான விமர்சனங்களே வந்தாலும் மகிழ் திருமேனி ஒரு தரமான படத்தை அஜித்திற்கு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கவுள்ளதாம். இந்தியாவிலும், வெளிநாடுகளில் சில இடங்களிலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் விடாமுயற்சி வெளியாகும் என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் AK62 திரைப்படம் தீபாவளிக்கு அல்லது பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், படம் தரமாக வந்தால் போதும், எப்போது வெளியானால் என்ன என்பதே பல ரசிகர்களின் எண்ணமாக இருக்கின்றது.
இதையடுத்து இப்படத்திற்காக அஜித் தன் பைக் சுற்றுலாவையும் தள்ளி வைத்ததாக தகவல்கள் வருகின்றன. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு தரமான வெற்றியை பெறவும், தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ரசிகர்களை திருப்தி படுத்தும் முனைப்பில் அஜித் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.