Vijay Sehtupathi – ஒன்று இல்லை இரண்டு இல்லை 250 வீடுகள் – விஜய் சேதுபதி செய்த செம உதவி

சென்னை: Vijay Sehtupathi (விஜய் சேதுபதி) நடிகர் விஜய் சேதுபதி பெப்சி யூனியன் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட பணம் கொடுத்த சம்பவத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழின் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் விஜய் சேதுபதி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது.

ஹீரோவாக சொதப்புறாரே: வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடித்த படங்கள் மெகா ஹிட்டானாலும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்விகளையே சந்தித்துவருகின்றன. இதனால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் சிறிது காலம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

மிஷ்கின் விஜய் சேதுபதி கூட்டணி: இந்தச் சூழலில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது. மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்தபோது உருவான நட்பு இருவரும் இணைந்து பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாக இப்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட்டில் தடம்: இதற்கிடையே தமிழில் சிறந்த நடிகராக வலம் வந்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்திருக்கிறது. அதன்படி மேரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருக்கும் அவர் சமீபத்தில் ராஜ் & டிகே இயக்கிய ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்தார்.

 Vijay Sethupathi Helped to Fefsi workers

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிந்தியை கற்றுக்கொண்டு தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசிய அவரை பார்த்து பாலிவுட் உலகம் கொஞ்சம் மிரண்டுதான் போனது. மேலும் அவரது நடிப்புக்கும் அங்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் விஜய் சேதுபதி தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு பெப்சி யூனியன் சாப்ரில் நடந்த மே தின விழாவில் கலந்துகொண்டார்ர் அவர். அப்போது மேடையில் பேசிய அவர், தொழிலாளர்களுக்கு சிறந்த அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். கூடவே இயக்குனர் செல்வமணி விஜய் சேதுபதி பற்றிய ஒரு உண்மையை கூறினார்.

 Vijay Sethupathi Helped to Fefsi workers

விஜய் சேதுபதியின் உதவி: ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “பெப்சி யூனியனில் பணி புரியும் 250 பேருக்கு வீடு கட்ட ஒரு கோடியே50 லட்சம் தொகை தேவைப்பட்டது. அதை ஒரு சமயம் விஜய் சேதுபதியிடம் கூறினேன். உடனே விஜய் சேதுபதி தலா 50,000 என மொத்தம் 250 பேருக்கு தேவையான தொகையை கொடுத்தார். அதிலும் 30 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. அதை சொன்ன பிறகு மறு நாள் தனது உதவியாளர்கள் மூலம் அந்த தொகைக்கான செக்கை கொடுத்தனுப்பினார்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.