இந்தியன் 2 படக்குழு தென்னாப்பிரிக்கா போனது ஏன் தெரியுமா? பின்னணியில் உள்ள சுவாரசியத் தகவல்!

சென்னை : இந்தியன் 2 படக்குழு தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டு படப்பிடிப்பினை நடத்தியதற்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

மகத்தான் வெற்றி : இயக்குநர் ஷங்கர் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்கிய இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தியன் 2 : இப்படத்தின் 2 ஆம் பாகம் கேட்டு ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்துவந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, லைகாவுடனான பிரச்சனை போன்றவற்றால் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டன.

you know why Indian 2 film crew went to South Africa?

தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு : இதையடுத்து லைகாவுடனான பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டதை அடுத்து, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடந்து வருகிறது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவில், பல்லாயிரம் அடி உயரத்திலான விமான சாகசக் காட்சிகள் உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் சுமார் 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

முக்கியான கிளைமாக்ஸ் காட்சி : இந்நிலையில், இந்தியன் 2 படக்குழு தென்னாப்பிரிக்காவில் நடந்ததற்கு முக்கிய காரணம், பிரிட்டிஸ் ஆட்சிகாலத்தில் இருந்த ரயில் அங்குதான் பல ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இந்த ரயில் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்பதால் படக்குழு தென்னாப்பிரிக்கா சென்று படப்பிடிப்பினை நடத்தியது.. இங்குதான் இந்தியன்2 படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.