இந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ..!!

புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புதுச்சேரி கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளது.

இதில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆட்டோவை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் மற்றும் கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை நிறுவனர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் யார் வேண்டுமானாலும் புதுச்சேரியில் உள்ள ஆட்டோவை தொடர்பு கொண்டால் இலவசமாக பயணம் செய்யலாம் அதற்கான கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8344868788 இந்த தொலைபேசியில் அழைத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ வந்து நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.